Home முக்கியச் செய்திகள் மக்களை முட்டாள்களாக்கும் கிளிநொச்சி இ.போ.ச பேருந்துகள் – பயணிகள் கடும் விசனம்

மக்களை முட்டாள்களாக்கும் கிளிநொச்சி இ.போ.ச பேருந்துகள் – பயணிகள் கடும் விசனம்

0

அதிகாலை வேளைகளில் வெளி மாவட்ட சேவையில் அல்லல்படும் அரச/தனியார்
உத்தியோகத்தர்களின் அல்லலை மேலும் அதிகரிக்கும் செயலில் இ.போ.ச கிளிநொச்சி
டிப்போ பேருந்துகள் செயற்பட்டு வருகின்றதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.

வட்டக்கச்சி மாத்திரம் செல்லும் ஓர் பேருந்து வட்டக்கச்சி பெயர் பலகையை மறைவான
இடத்தில் வைத்தவாறு அக்கரைப்பற்று பெயர்ப்பலகையுடன் பயணிகளை ஏற்றுகிறது.

மிகவும் குறைந்த வேகத்தில் நகரும் இப்பேரூந்துகள் A -9 வீதியில் வவுனியா வரை
செல்லக்கூடிய பயணிகளை தனது மாய வலைக்குள் வீழ்த்தி தனது டிப்போவுக்கான
வருமானத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறதா என்ற ஐயப்பாட்டினை
தோற்றுவிப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இறுதியில் நேரம் பிந்தி சேவைக்கு சென்று அறிக்கையிடுவதால் தமது சொந்த
விடுப்புக்கு பங்கம் ஏற்படுவதாக, குறித்த பேருந்தில் பயணிக்கும் அரச/தனியார்
நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

செய்திகள் – பு.கஜிந்தன் 

https://www.youtube.com/embed/loHAb56rFcg

NO COMMENTS

Exit mobile version