Home இலங்கை சமூகம் கடவுச்சீட்டு பெற காத்திருப்பொருக்கு வெளியான நற்செய்தி

கடவுச்சீட்டு பெற காத்திருப்பொருக்கு வெளியான நற்செய்தி

0

இனிவரும் காலத்தில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடவுச்சீட்டுக்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் கீழ் பல மாவட்டங்களில் கடச்சீட்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அத்துடன், ஒரு நாள் சேவையின் கீழ் சரியான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த நான்கு மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டுக்களை வழங்குவது தற்போது சாத்தியமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாதாந்திர வருமானம்

இதனை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் மகேஷ் கருணாதாச ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் மாதாந்திர வருமானமும் அதிகரித்துள்ளதாகவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version