மாரவில முது கட்டுவ கடற்கரையில், தலை,கை, கால்கள் இன்றி சடலம் கரையொதுங்கிய நிலையில் அங்கு பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
மாரவில முது கட்டுவ கடற்கரையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மாரவில பொலிஸார் அங்கு சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.
விசாரணை
இதன்போது, கரை ஒதுங்கிய சடலத்தில் தலை, கைகள் மற்றும் கால்கள் எவையும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீல நிற காற்சட்டையுடன் உடலின் ஒரு பகுதி மட்டுமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
