99.3 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக அரச வங்கியின் மூன்று பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பந்தப்பட்ட வங்கியின் அடகுப் பிரிவில் பணிபுரிந்த சந்தேக நபர்கள், 24 காரட் தங்கம் போல் போலி தங்கப் பொருட்களை அடகு வைத்து பணத்தை எடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை விசாரணை
சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் ஏற்கனவே வெளிநாடு சென்றுவிட்டதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.
மோசடியில் ஈடுபட்ட மேலும் பல வங்கி அதிகாரிகள் குறித்து காவல்துறை விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
