Home இலங்கை அரசியல் வரி தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

வரி தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

0

உழைக்கும் போது செலுத்தும் வரி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உழைக்கும் போதே செலுத்தும் வரி அறவீட்டு திருத்துதல் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் அந்த சலுகையை மக்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எஹலியகொட புதிய சந்தைக்கு அருகாமையில் நடைபெற்ற இயலும் சிறிலங்கா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வரி அறவீட்டுத்திட்டம் 

உழைக்கும் போதே செலுத்தும் வரி அறவீட்டுத் திட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக மருத்துவர்கள் உள்ளிட்ட தொழிற்துறைகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் இவ்வாறு எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டிருந்தனர்.

இவ்வாறான ஓர் பின்னணியில் ஜனாதிபதி உழைக்கும் போதே செலுத்தும் வரி அறவீட்டு முறையில் திருத்தம் செய்யப்படும் எனவும் மக்களுக்கு சலுகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version