Home இலங்கை அரசியல் அநுரவின் கொள்கை உரை தொடர்பில் கவனம் செலுத்தும் தரப்புக்கள்

அநுரவின் கொள்கை உரை தொடர்பில் கவனம் செலுத்தும் தரப்புக்கள்

0

Courtesy: Sivaa Mayuri

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) நேற்று (21) நாடாளுமன்றில் முன்வைத்த தமது அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தின் முக்கிய விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகளும், இராஜதந்திர தரப்புக்களும் தமது கவனத்தை செலுத்தியுள்ளன.

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த விடயங்களை அறிவித்துள்ளார்.

1) எதிர்வரும் டிசம்பரில் ஒரு இடைக்கால நிலையான கணக்கு யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். 2025ஆம் ஆண்டுக்கான பாதீடு அடுத்த ஆண்டு பெப்ரவரியில் சமர்ப்பிக்கப்படும்.

2) அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் மூலம், அஸ்வெசும சமூக நலத்திட்டத்தின் கொடுப்பனவு மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் அதிகரிக்கவுள்ளது.

3) அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம், பாடசாலை பொருட்களை வாங்குவதற்கான கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்கும்.

4) தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ஏற்றுமதிகளை ஆண்டுக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்தும் நோக்கத்தில் ஐடி துறை பணியாளர்களின் எண்ணிக்கை 200,000 ஆக அதிகரிக்கப்படும்.

5) சர்வதேச நாணய நிதியத்தின் வெளிநாட்டு நிதி வசதி தொடர்பான, மூன்றாவது பணியாளர் நிலை ஒப்பந்தத்தில் இந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திட அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

6) இலங்கையில் இனவாதத்துக்கு அல்லது மதவாதத்துக்கு இனி இடமில்லை.

7) பொருளாதார நன்மைகள் மக்களிடையே நியாயமான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் சந்தை ஏகபோகங்கள் இல்லாதொழிக்கப்படும்.

8) மக்களின் நலனுக்காக வினைத்திறன்மிக்க அரச சேவையொன்று உருவாக்கப்படும்

9) அரசியல்வாதிகள், நிறைவேற்று அதிகாரிகள் உட்பட அனைவரும் சட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும்.

10) ஊழல் குற்றவாளிகள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்

11) தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக செயலணியொன்று உருவாக்கப்படும்

12) முதலீட்டு திட்டங்களின்போது குறிப்பாக எரிசக்தி துறை முதலீடுகளில் இலங்கை அரசாங்கத்தின் பங்கும் இருக்கும்.

13) கூட்டுறவு முறைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கப்படும்.

14) சுற்றுலாத்துறை வருமான இலக்கு 8 மில்லியன் டொலர்களாக இருக்கும்.
15) நாடாளுமன்றம் மக்களுடன் நெருங்கி செயற்படும் வகையில் மாற்றப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version