பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்துவதற்கான முறைமை ஒன்று உருவாக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(11.09.2025) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், டிஜிட்டல் பொருளாதார மாதத்திற்கு இணையாக, செயற்கை நுண்ணறிவு தொடர்பான உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கலால் வலுவூட்டப்பட்ட நாடாக இலங்கையை மாற்றி அமைக்கும் பயணத்தைத் துரிதப்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக செப்டம்பர் மாதம் டிஜிட்டல் பொருளாதார மாதமாகப் பெயரிடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
