Home முக்கியச் செய்திகள் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு சென்றடைந்த பணம்: வெளியான நற்செய்தி

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு சென்றடைந்த பணம்: வெளியான நற்செய்தி

0

2024ஆம் ஆண்டுக்கான சிறுபோக இழப்பீட்டுக் கொடுப்பனவுகளில் 90% தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 6,459 விவசாயிகளுக்கு 5,246 ஏக்கருக்காக100 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு 

இதேவேளை பயிர் சேதம் ஏற்பட்டுப் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாவிட்டால், மேல்முறையீடு செய்யலாம் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு, அரசாங்கத்தால் வழங்கப்படும் ஹெக்டேருக்கு 25,000 ரூபாய், இந்த வார இறுதிக்குள் விவசாயிகளுக்கு வரவு வைக்கப்படும் என விவசாயம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சும் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version