Home இலங்கை சமூகம் மயிலை வேட்டையாடிய ஐவர் : தேடுதல் நடவடிக்கையில் காவல்துறையினர்

மயிலை வேட்டையாடிய ஐவர் : தேடுதல் நடவடிக்கையில் காவல்துறையினர்

0

மாதுரு ஓயா தேசிய பூங்காவிற்குள் மயில் ஒன்றை அறுத்து அதன் இறைச்சியை வறுத்து அதனை உட்கொண்ட வெளிநாட்டவர் ஒருவர் உட்பட வேடுவ சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது 2019 ஆம் ஆண்டு அல்லது 2020 ஆம் ஆண்டில் நடந்ததாகக் கூறப்படும் நிலையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சிகளால் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த காணொளியை எட்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ள நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை அடுத்தே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வனவிலங்கு காப்பாளர் 

அத்தோடு, மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்திற்கு இது தொடர்பில் வனவிலங்கு காப்பாளர் ஹெனானிகல டபிள்யூ.எம்.குமாரசிறி விஜேகோன் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

இந்த நிலையில், பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்ட மயிலை வேட்டையாடுவதில் சமூகத்தின் பாரம்பரிய வேட்டைக் கருவிகளான வில் மற்றும் அம்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த காணொளியின் படி பழங்குடி சமூகத்தின் பாரம்பரிய முறைப்படி மயிலை வறுத்து அதனை தேனில் குழைத்து உட்கொள்வது காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version