Home இலங்கை அரசியல் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பெவ்ரல் விதித்துள்ள காலக்கெடு

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பெவ்ரல் விதித்துள்ள காலக்கெடு

0

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஜனாதிபதி வேட்பாளர்கள் நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடுவை முன்வைக்குமாறு பெவ்ரல் அமைப்பு விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

கடந்த காலங்களிலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டனர். ஆனால் அவர்களின் வாக்குறுதிகளிற்கும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டது எனவும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்த விடயங்கள் யதார்த்தசூழ்நிலையுடன் ஒத்துப்போகததாக காணப்பட்டமையே இதற்கான காரணம். அவர்கள் சந்தேகமற்றமுறையில்  வாக்காளர்களை கவர்வதற்காக வாக்குறுதிகளை வழங்கினார்கள் எனவும் பெவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடி

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க 26ம் திகதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளார், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனது தேர்தல்விஞ்ஞாபனத்தை வெளியிடுவார். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை விரைவில் வெளியிடவுள்ளார்.

“சுதந்திரத்தின் பின்னர் சந்தித்த மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முயற்சித்துக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கை உள்ளது.

அரசியலை சுத்தம் செய்யும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெவ்ரல் வேட்பாளர்கள் தங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான காலஎல்லையை முன்வைக்கும் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

எங்கிருந்து  நிதி

தேர்தல் விஞ்ஞாபனத்துடன் செயற்திட்டமொன்றையும் பெவ்ரல் கோரவுள்ளது.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் தங்கள் சொந்த கொள்கைகளை திட்டங்களை கொண்டிருப்பதற்கான உரிமையுள்ளது ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை அவர்கள் மக்களிற்கு தெரிவிக்கவேண்டும் என பெவ்ரல் எதிர்பார்க்கின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேட்பாளர் 1000 பாடசாலைகளை உருவாக்குவேன் என தெரிவித்தால் அதற்கான நிதியை அவர் எங்கிருந்து பெற்றுக்கொள்வார் என்பதை தெரிவிக்கவேண்டும். சமூகத்திற்கு அந்த திட்டத்தினால் ஏற்படக்கூடிய பலாபலன்கள் குறித்து குறிப்பிட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version