Home முக்கியச் செய்திகள் பெக்கோ சமனின் மனைவி சிஐடி விசாரணைக்கு

பெக்கோ சமனின் மனைவி சிஐடி விசாரணைக்கு

0

இந்தோனேசியாவில் (Indonesia) கெஹல்பத்தர பத்மேவுடன் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி, தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

விமான நிலைய குற்றப் புலனாய்வு பிரிவு இந்த விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குற்றப் புலனாய்வு பிரிவு 

குறித்த பெண், தான் பெக்கோ சமனின் மனைவி என்பதை குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (29.08.2025) மாலை 5.50 அளவில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து வந்த இலங்கை விமானம் UL 365 இல் அவர்கள் தனது குழந்தையுடன் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version