Home இலங்கை அரசியல் ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்து வெளியான பின்னணி

ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்து வெளியான பின்னணி

0

நாடாளுமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் சார்பாக வழங்கப்படும் தொகை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விடயங்களை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ரத்நாயக்க (Gamini Rathnayake) இன்று (07) நாடாளுமன்றில் வெளியிட்டுள்ளார்.

அதன்போது, 1976 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து ஓய்வூதியம் பெற்றவர்கள் மற்றும் அவர்களுக்கு செலுத்தப்பட்ட தொகை குறித்த தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ரத்நாயக்க வழங்கியுள்ளார்.

மாதாந்திர ஓய்வூதியம்

அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி வரை 330 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் செலுத்தப்படும் 182 வாழ்க்கைத் துணைவர்கள் (மனைவிகள் அல்லது கணவர்கள்) உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 23,541,645 மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version