Home இலங்கை அரசியல் வெகு விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியமும் இரத்து..

வெகு விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியமும் இரத்து..

0

வெகுவிரைவில்  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 சட்ட வரைபு தயார்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2021, 2022, 2023ஆம் ஆண்டுகளில் வங்குரோத்தடைந்திருந்த நாடு இன்று இந்நிலைமையை அடைந்துள்ளது. வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதற்கமையவே, கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றக் கூடிய சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினர் இதற்கு வாக்களித்திருக்க முடியும்.

ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. மாறாக இந்த விடயத்தை மறைப்பதற்காக மறுநாள் சபையில் வேறொரு விடயத்துக்காக கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

அதேபோன்று வெகுவிரைவில்  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கான சட்டமும் நிறைவேற்றப்படும். அதற்கான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு வருகிறது என  குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version