Courtesy: Sivaa Mayuri
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் மிக விரைவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில், இதற்கான ஆரம்ப எதிர்பார்ப்பை ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டவுடனேயே புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி நாடாளுமன்றத் தேர்தல் உடனடித தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அதற்கான காலத்தை அவர் குறிப்பிடவில்லை.
ஜனாதிபதி தேர்தல்
பொதுவாக ஜனாதிபதி தேர்தல் முடிந்த நிலையில் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்படும்போது, அவருக்கு வசதியான அமைச்சரவை அமைக்கப்படுவது அவசியமானதாகும்.
இதன்போதே ஜனாதிபதியினால் தமது திட்டங்களை முன்னெடுக்கமுடியும்.
அதுவும் தற்போது ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த இந்த வெற்றியை நாடாளுமன்ற தேர்தலில் தக்கவைத்துக்கொள்ளமுடியுமாக இருக்கும்.
எனவே அநுரகுமாரவின் எதிர்பார்ப்புக்கு அர்த்தம் இருப்பதாக அரசியல் தரப்பினர் கூறுகின்றனர்.
அதுவரை தற்காலிக அமைச்சரவை ஒன்று அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.