Home இலங்கை அரசியல் மக்களோடு ஒன்றிணைந்து பயணிக்கும் அநுர அரசாங்கம்: தேர்தல் தான் பின்னணியா..!

மக்களோடு ஒன்றிணைந்து பயணிக்கும் அநுர அரசாங்கம்: தேர்தல் தான் பின்னணியா..!

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) நாட்டில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

மக்களின் நலனுக்காகவும், பொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற்றும் வகையிலும் குறித்த நடவடிக்கைகள் அதிரடியாக முன்னெடுக்கப்படுகின்றன. 

பொதுமக்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என எவ்வித பாரபட்சமும் இன்றி ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் அமைவதாக பலர் மத்தியிலும் பேசப்படுகின்றது. 

மறுபக்கம், எவ்வாறாக இருந்தாலும், ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைகள், மக்களுக்காக இல்லை, அடுத்து வரும் தேர்தலில் தமது ஆட்சியை தக்க வைத்து கொள்ள மேற்கொள்ளும் தந்திரோபாய செயலே எனவும் விமர்சிக்கப்படுகின்றது. 

மக்களோடு ஒன்றிணைந்து பயணிக்கும் அநுரவின் ஆட்சியில், உண்மைத்தன்மை உள்ளதா அல்லது சூழ்ச்சிகள் நிறைந்துள்ளனவா என்று தேர்தலை கடக்கும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும் பலரின் தூரநோக்க பார்வைகள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை மக்களின் பார்வை எவ்வாறு நோக்குகின்றது என ஆராய்கின்றது லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version