கொழும்பு (Colombo) – பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சியின் தலைமையகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது, இன்றையதினம் (29.04.2024) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அண்மையில் கலந்து கொண்டிருந்த ஜே.வி.பி.யின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே என்பவர், தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணி பகிஷ்கரிப்பு
புதிய மக்கள் முன்னணி
பெண்கள் மீதான அத்துமீறல் குற்றவாளிகள், கொலைகாரர்கள், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டோரே 1988 – 1989ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்டதாகக் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நளின் ஹேவகே தெரிவித்திருந்தார்.
அவரது கருத்தைக் கண்டிக்கும் வகையில், புதிய மக்கள் முன்னணி எனும் சிவில் அமைப்பு இன்றைய ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் ஏராளம் பொதுமக்கள் கலந்து கொண்டு நளின் ஹேவகே தெரிவித்த கருத்தை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்பியிருந்தனர்.
யாழில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்க கோரி போராட்டம்
ஏட்டிக்குப் போட்டியாக மே தினக் கூட்டங்களுக்கு ஏற்பாடு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |