மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான நுவன் போபகேயை (Nuwan Bopage) ஆதரித்து வவுனியா (Vavuniya) நகரில் துண்டுப்பிரசுரம் வழங்கும் செயற்பாடொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த செயற்பாடானது இன்றைய (23) தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் விடுதலை
மக்கள் போராட்ட அமைப்பினருடன் மார்க்சிஸ லெனினிச கட்சியினரும் குறித்த பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் போராளிகள் அமைப்பான புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவு வழங்குவதாக இன்றைய (23) தினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.