Home இலங்கை சமூகம் மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள விசேட அறிவித்தல்

மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள விசேட அறிவித்தல்

0

மக்கள் வங்கி (People’s Bank) தனது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவித்தலொன்றை வழங்கியுள்ளது.

பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு திறன்மிக்க சேவையை வழங்கும் நோக்குடன் டிஜிட்டல் வங்கி முறைமையை மேம்படுத்துவதனால் அவ்வப்போது தடை ஏற்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

இணைய வங்கி சேவையில் தடைகள்

தனிநபர் இணைய வங்கிச்சேவைகள் மற்றும் Peoples’s Pay Digital Wallet App தவிர அனைத்து கையடக்க தொலைபேசி வங்கிச் செயலிகளும் தடைப்பபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, , ஜனவரி 05ஆம் திகதி மு.ப 04.30 மணி முதல் மு.ப 05.30 மணி வரையும், ஜனவரி 06ஆம் திகதி மு.ப 01.30 மணி முதல் மு.ப 02.30 மணி வரை இணைய வங்கி சேவையில் தடைகள் ஏற்படக்கூடும் என கூறியுள்ளது.

இதன் நிமித்தம் ஏற்படக்கூடிய வசதியீனங்களுக்காக தாம் பெரிதும் வருந்துவதாகவும் மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version