Home இலங்கை அரசியல் அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆதரவு குறையவில்லை

அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆதரவு குறையவில்லை

0

அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆதரவு குறைவடையவில்லை என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்க தேர்தல்களில் ஆளும் கட்சி தோல்வியை தழுவியதன் அடிப்படையில் மக்கள் ஆதரவு குறைந்துள்ளதாக கருத முடியாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கூட்டுறவு சங்க தேர்தல்களில் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான வாக்காளர்களே பங்கேற்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த மக்களின் ஆணையை பிரதிபலிக்காது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

கடந்த உள்ளூர் ஆட்சி மன்றத் தேர்தல்களின் போது போன்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டுறவு சங்க ஆட்சிகளை கைப்பற்றிய போதிலும் தனி ஒரு கட்சியாக தமது கட்சிக்கு கூடுதல் பலம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பெரும்பான்மையான கூட்டுறவு சங்கங்களின் ஆட்சி அதிகாரம் தொடந்தும் தேசிய மக்கள் சக்தி வசம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்கங்கள் ஊடாக மக்களுக்கு உயர்ந்த அளவிலான சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version