Home இலங்கை பொருளாதாரம் தேசிய விமான நிலைய விஸ்தரிப்பு: சர்ச்சைக்குரிய சீன நிறுவனத்துக்கு அனுமதி

தேசிய விமான நிலைய விஸ்தரிப்பு: சர்ச்சைக்குரிய சீன நிறுவனத்துக்கு அனுமதி

0

Courtesy: Sivaa Mayuri

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், புதிய முனையத்தை நிர்மாணிப்பதற்கான கேள்விக்கொள்முதல் மேன்முறையீட்டு சபை மற்றும் அமைச்சகம் வழங்கிய முடிவின்படி, சர்ச்சைக்குரிய இலங்கை – சீன கூட்டு நிறுவனத்திற்கு(ஜேவி) வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை  – சீனா கூட்டு  நிறுவனமானது உள்ளூர் நிறுவனமொன்றையும், வெளிநாட்டு நிறுவனமானமொன்றையும் இணைத்து செயற்படுத்தியுள்ளது.

இறுதி ஒப்புதல்

எவ்வாறாயினும், செயலாளரின் கூற்றுப்படி, இறுதி ஒப்புதல் அமைச்சரவையின் முடிவு மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தது என தெரிவித்துள்ளார்.

எனவே இந்த முடிவுகள் சிலவேளைகளில் தற்போதைய முடிவுகளை மாற்றக்கூடும் என்று அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக விமான நிலையத்தில் இந்த புதிய வசதியை நிர்மாணிப்பதற்கான ஏலங்கள், 2023 டிசம்பர் 4ஆம் திகதியன்று கோரப்பட்டன.

இதன் அடிப்படையிலேயே தற்போதைய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த முனைய கட்டுமானம், ஏர்போர்ட் அண்ட் ஏவியேசன் சர்வீசஸ் (இலங்கை) லிமிடெட் மூலம் 2020 டிசம்பரில் ஜப்பான் இன்டர்நேசனல் கோஆப்பரேசன் ஏஜென்சி (ஜெய்கா) நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பொருளாதார நெருக்கடியினால் அது இடைநிறுத்தப்பட்டது.    

NO COMMENTS

Exit mobile version