Home இலங்கை குற்றம் அர்ச்சுனா எம்.பியால் தாக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில்

அர்ச்சுனா எம்.பியால் தாக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில்

0

யாழில் (Jaffna) நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் (Ramanathan Archchuna) தாக்குதலுக்கு உள்ளாகிய
நபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று (11) இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு இராமநாதன்
அர்ச்சுனா சென்று அங்கு காணொளி பதிவில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது அங்கு நின்ற நபர்
தன்னை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என அர்ச்சுனாவிடம் தெரிவித்திருந்தார். எனினும், அர்ச்சனா அதனை மீறி காணொளி பதிவில் ஈடுபட்டுள்ளார்.

முறைப்பாடு பதிவு

இந்நிலையில்
அர்ச்சுனாவுக்கும் குறித்த நபருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அர்ச்சுனா உணவு  தட்டு ஒன்றினை எடுத்து குறித்த நபரை தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அர்ச்சனா, குறித்த நபர்
தன் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்துள்ளார் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version