Home இலங்கை சமூகம் யாழில் மைத்துனர் தாக்கியதால் நபர் எடுத்த முடிவு

யாழில் மைத்துனர் தாக்கியதால் நபர் எடுத்த முடிவு

0

யாழில் மைத்துனர் தாக்கியதால் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இதன்போது அளவெட்டி – விசவெட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்தவர் மதுப் பாவனைக்கு அடிமையானவர். இந்நிலையில், கடந்த 18ஆம் திகதி
மைத்துனருக்கும் குறித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக
மைத்துனரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

மரண விசாரணைகள் 

பின்னர் சிகிச்சையின் பின் நேற்றையதினம் வீடு திரும்பி, வீட்டில்
உள்ளவர்களுடன் முரண்பட்டார்.

இதனையடுத்து, இன்று காலை தவறான முடிவெடுத்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார். 

NO COMMENTS

Exit mobile version