Home இலங்கை சமூகம் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்படும் தேசபந்துவுக்கு வாழ்த்து கூறிய பதிவு

சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்படும் தேசபந்துவுக்கு வாழ்த்து கூறிய பதிவு

0

கொழும்பு முன்னணி கல்லூரியொன்றின் பழைய மாணவர்கள் சங்கத்தால் சமூக ஊடகங்களில்
வெளியிடப்பட்டதாக கூறப்படும், போலியான பதிவு தொடர்பாக குற்றப் புலனாய்வுத்
துறையிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கல்லூரியின் முன்னாள் மாணவரான தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக
(IGP) நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அசல் பதிவு
சங்கத்தால் பகிரப்பட்டிருந்தது.

 மீண்டும் சமூக ஊடகங்களில்

இருப்பினும், தென்னகோன், அண்மையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி பின்னர்
காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப் பதிவின் திரிபுபடுத்தப்பட்ட
பதிப்பு மீண்டும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னைய அசல் செய்தி தவறாக பகிரப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் மேலதிக விசாரணைக்காக இணையக் குற்றப் பிரிவுக்கும்
பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version