Home இலங்கை குற்றம் யாழில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

யாழில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

0

கோப்பாய் – கோண்டாவில் பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தி மற்றும்
விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது  இன்றையதினம் (26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில், 42 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து ஒன்றரை லீட்டர் கசிப்பும்
மீட்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யபட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7

Source: https://tamilwin.com/article/person-involved-in-leak-production-arrested-jaffna-1740569226

NO COMMENTS

Exit mobile version