இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது சில வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கு பேனாவுக்குப் பதிலாக பென்சில்கள் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கு கார்பன் பேனாவை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு
எனினும், கார்பன் பேனாவுக்குப் பதிலாக பென்சில் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுக்களும் செல்லுபடியாகும் என தேர்தல் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணிக்கு நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.