Home இலங்கை அரசியல் இலங்கையில் ஒரு திருப்புமுனை – வாக்களித்து திரும்பிய ரணில் கருத்து

இலங்கையில் ஒரு திருப்புமுனை – வாக்களித்து திரும்பிய ரணில் கருத்து

0

ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் இன்று (21) காலை கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியில் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, அனைவரும் அமைதியாக செயற்பட்டு ஒன்றிணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

இன்று நடைபெறும் தேர்தல் இலங்கையில் ஒரு திருப்புமுனை, இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என ரணில் குறிப்பிட்டுள்ளார்.

இது சரியான தருணம்

நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு புதிய தலைமைத்துவத்தை பரிசீலிப்பதற்கு இது சரியான தருணம் என நம்புகின்றீர்களா என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ரணில், கடந்த இரண்டு வருடங்களில் தான் நாட்டின் பொருளாதாரத்தையும் ஜனநாயகத்தையும் பலப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து தேர்தலை நடாத்த முடிந்தமை குறித்து தாம் பணிவுடன் பெருமை கொள்வதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தல் இலங்கையில் ஒரு திருப்புமுனையாகவும், நாட்டை அழித்த பாரம்பரிய அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளில் இருந்து விலகி நாட்டில் புதிய சமூக மற்றும் அரசியல் அமைப்பை கட்டியெழுப்புவதற்கான பெறுமதியான சந்தர்ப்பம் எனவும் ரணில் சுட்டிக்காட்டினார். 

NO COMMENTS

Exit mobile version