Home இலங்கை குற்றம் மீன்கழிவுகளை வீதியோரத்தில் வீசிய வர்த்தகருக்கு பொதுமக்களின் நூதனமான தண்டனை

மீன்கழிவுகளை வீதியோரத்தில் வீசிய வர்த்தகருக்கு பொதுமக்களின் நூதனமான தண்டனை

0

கம்பளை பிரதேசத்தில் மீன் விற்பனை நிலையமொன்றின் கழிவுகளை நாளாந்தம் வீதியோரத்தில் வீசிவிட்டுச் செல்லும் வர்த்தகர் ஒருவருக்கு பொதுமக்கள் நூதனமான முறையில் தண்டனை வழங்கியுள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த வர்த்தகர் வழமை போன்று மீன்கழிவுகளை வீதியோரத்தில் வீசிவிட்டுச் செல்ல முயற்சித்துள்ளார்.

பொலிஸாரிடம் ஒப்படைப்பு

அதன் போது முன்னதாக தயாராக இருந்த பொதுமக்கள், குறித்த வர்த்தகரின் வாகனத்தை முற்றுகையிட்டு நிறுத்தி, அவர் வீதியோரத்தில் கொட்டிய மீன் கழிவுகளை அள்ளி அவரது வாகனத்துக்குள்ளேயே வீசியுள்ளனர். 

அதன் பின்பு சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு அறிவித்து, வர்த்தகரையும் அவருடன் வந்தவரையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version