ஷங்கர்
இந்திய அளவில் பிரம்மாண்ட படங்களுக்கு பெயர் பெற்றவர் இயக்குனர் ஷங்கர். எந்திரன், 2.0 என அவரது பல படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டவை.
இவர் இயக்கத்தில் கடைசியாக இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் வசூலில் தோல்வி அடைந்தது.
ஷங்கர் தற்போது தெலுங்கில் கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி உள்ளார். ராம் சரண், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர்.
பொங்கல் ஸ்பெஷலாக வரும் ஜனவரி 10ம் தேதி கேம் சேஞ்சர் ரிலீஸ் ஆக இருக்கிறது. அமெரிக்காவில் படத்தின் pre-release நிகழ்ச்சி எல்லாம் நடைபெற்றது.
நடிகை அமலாபால் மகனா இது?.. வைரலாகும் அழகிய புகைப்படம்
இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஒரு கதாபாத்திரத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், மற்றொரு கதாபாத்திரத்தில் சமூகத்தின் மீது, அக்கறைகொண்ட இளைஞர் என இரண்டு வேடத்தில் நடித்துள்ளார்.
சம்பளம்
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்திற்காக ஷங்கருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், கேம் சேஞ்சர் படத்தை இயக்க சம்பளமாக ரூ. 50 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.