ஹோமாகம ஆதார மருத்துவமனையில் விரலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவரின் இறப்புக்கான காரணங்கள் தற்போது வரை சரியாக தெரியவரவில்லை.
எனினும், வைத்தியசாலையின் அலட்சியத்தாலேயே அவர் உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், அவரது மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருத்துவமனை ஆரம்பித்துள்ளது.
ஹோமாகம ஆதார மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
