Home சினிமா ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்… யாருக்கு அதிகம், முழு விவரம்

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்… யாருக்கு அதிகம், முழு விவரம்

0

விஜய் டிவி

தமிழ் நாட்டில் பிரபலமான தொகுப்பாளர்கள் என்றால் உடனே விஜய் டிவி பிரபலங்கள் தான் நியாபகம் வருவார்கள்.

அந்த அளவிற்கு இந்த தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் தான் மக்களை கவர்ந்துள்ளனர். டிடி, கோபிநாத், ரம்யா, பாவனா, பிரியங்கா, மாகாபா, மகேஷ், ரக்ஷன், ஜாக்குலின் என இப்படி ஒரு பெரிய லிஸ்ட் சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்போது சில புதிய தொகுப்பாளர்களும் விஜய் டிவியில் களமிறங்கி வருகிறார்கள்.

சம்பளம்

ரியாலிட்டி ஷோக்களின் கிங் என கொண்டாடப்படும் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஒவ்வொரு தொகுப்பாளரும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதை காண்போம்.

ரக்ஷன்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளர் பயணத்தை தொடங்கியவர் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் ஒரு எபிசோடுக்கு ரூ. 1 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறாராம்.

மாகாபா ஆனந்த்

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் போட்டியாளர்கள் இருக்கிறார்களோ இல்லையோ இவர் தொகுத்து வழங்க வந்துவிடுகிறார். இவர் சூப்பர் சிங்கர், அண்டாகாகசம், ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

தற்போது மாகாபா ஆனந்த் ஒரு எபிசோடுக்கு ரூ. 2.5 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

பிரியங்கா தேஷ்பாண்டே

மாகாபாவுடன் இணைந்து சூப்பர் சிங்கர், ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கலக்கி வருகிறார்.

பின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை தனியாக தொகுத்து வழங்குகிறார்.
இவர் ஒரு எபிசோட் தொகுத்து வழங்க ரூ. 3 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக தெரிவிக்கின்றன.

கோபிநாத்

15 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் பணியாற்றி வருகிறார்.

நீயா நானா என்றாலே கோபிநாத் தான் என சொல்லும் அளவிற்கு இந்நிகழ்ச்சி மூலம் மக்களை கவர்ந்துவிட்டார். இதுதவிர விருது விழா, பிரபலங்களுடனான பேட்டி என கலக்கி வருகிறார்.

விஜய் டிவியில் இவர் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க ரூ. 5 லட்சம் வரை சம்பளம் பெறுகிறாராம். 

NO COMMENTS

Exit mobile version