கடந்த 24 ஆம் திகதி எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காட்டு பகுதிக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மேலும் ஒரு காட்டுப் பகுதிக்கு தீ வைக்க முற்பட்ட போது
கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்ல கினலன் தோட்டத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு
நேற்று ( 25) கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய தகவல்
சந்தேக நபர் காடுகளுக்கு தீ வைப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 ஆம் திகதி கினலன் தோட்ட வனப்பகுதி ஏற்பட்ட காட்டு தீயினால் சுமார் 15
ஏக்கர் காடு எறிந்து நாசமாகி உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
சந்தேக நபரை இன்றைய தினம் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Source: https://tamilwin.com/article/person-who-set-fire-to-forest-was-arrested-ella-1727336777
