ஷங்கர் – ரஜினி
இயக்குனர் ஷங்கர் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்தால் அது மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
சிவாஜி படத்தில் துவங்கிய இவர்களுடைய கூட்டணி எந்திரன், 2.0 ஆகிய படங்களில் தொடர்ந்தது. 2.0 படத்திற்கு பின் மீண்டும் ரஜினியுடன் ஷங்கர் எப்போது கைகோர்ப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் கேம் சேஞ்சர்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
ஒருமுறை விழா மேடையில் கூட ரஜினிகாந்தை படப்பிடிப்பில் மிஸ் செய்வதாக ஷங்கர் பேசியிருந்தார். அதுவும் இணையத்தில் வைரலானது.
ஷங்கர் – ரஜினி கூட்டணி
இந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் ப்ரோமோஷனில் இருக்கும் ஷங்கரிடம் பத்திரிகையாளர் ஒருவர், மீண்டும் ரஜினியின் இணைந்து பணிபுரிவீர்களா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கொடுத்த இயக்குனர் ஷங்கர் “நல்ல கதை அமைந்தால் ரஜினிகாந்த் சாருடன் இணைந்து படம் பண்ணலாம்” என கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற 10ஆம் தேதி வெளியாகிறது. இதை தொடர்ந்து இந்தியன் 3 படம் வெளிவரவுள்ளது. இதன்பின் வேல்பாரி படத்தை தான் ஷங்கர் இயக்கப்போகிறார் என தகவல் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.