Home இலங்கை சமூகம் ​தனியார் பேருந்து பணிப்பகிஷ்கரிப்பு ஒத்திவைப்பு

​தனியார் பேருந்து பணிப்பகிஷ்கரிப்பு ஒத்திவைப்பு

0

எதிர்வரும் வாரத்தில் மேற்கொள்ள உத்தேசித்திருந்த பேருந்து பணிப் பகிஷ்கரிப்பை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக தனியார் போக்குவரத்துப் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

“க்ளீன் ஶ்ரீலங்கா(Clean Srilanka)” செயற்திட்டத்தின் கீழ் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள அலங்காரங்கள், மேலதிக பொருத்துகளை அகற்றும் நடவடிக்கையொன்றை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பேருந்து பணிப்பகிஷ்கரிப்பு 

எனினும் தங்கள் சொந்தச் செலவில் பேருந்துகளை அலங்கரித்துள்ள நிலையில், அவற்றை அகற்ற பொலிஸாருக்கோ அரசாங்கத்துக்கோ எதுவித அதிகாரமும் இல்லை என்று தனியார் ​போக்குவரத்துப் பேருந்துகளின் உரிமையாளர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

அத்துடன் எதிர்வரும் திங்கள் தொடக்கம் தனியார் போக்குரவத்துப் பேருந்துகள் பணிப் பகிஷ்கரிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் தற்போதைய நிலையில் இவ்விடயம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தும் வரையில் தங்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் போக்குவரத்துப் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளாா்.

NO COMMENTS

Exit mobile version