Home இலங்கை சமூகம் கந்தளாயில் ஏறி பூச்சி தாக்கம்:விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை

கந்தளாயில் ஏறி பூச்சி தாக்கம்:விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை

0

திருகோணமலை- கந்தளாயில் “ஏறி பூச்சி” எனப்படும் புற்றுநோய் போன்று பரவும் புல்வெளி பூச்சி தாக்கம் காரணமாக பல ஏக்கர் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கந்தளாய்- நீர்ப்பாசனம் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பரட்டைக்காடு,
செட்டிக்காடு மற்றும் எரிக்கிலம் பகுதிகளில் சிறுபோக நெற்செய்கையின் அறுவடை
சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், விவசாயிகள் பெரும்
இழப்பை எதிர்கொண்டு வருவதாகவும், பலருக்கு கடன்சுமை அதிகரித்து வருவதாகவும்  தெரிவிக்கின்றனர்.

உடனடியாக நடவடிக்கை

பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டும் தாக்கம் குறைவடையவில்லை என்று விவசாயிகள்
தெரிவிக்கின்றனர்.

நிலைமை மேலும் மோசமாகும் முன், விவசாய திணைக்களம் மற்றும் பொறுப்புடைய அதிகாரிகள் உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version