Home அமெரிக்கா ட்ரம்ப் மனரீதியாக நிலையானவரா..! பேசுபொருளான பீட் ஹெக்ஸெத்தின் அதிரடி பதில்

ட்ரம்ப் மனரீதியாக நிலையானவரா..! பேசுபொருளான பீட் ஹெக்ஸெத்தின் அதிரடி பதில்

0

ஈரான் போரின் பின்னணியில், அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் “மனநிலை” குறித்து காங்கிரஸில் கடுமையாக கேள்வி எழுப்பப்பட்டார்.

குறிப்பாக, அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட கடுமையான பதிவுகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில், “முழு நாகரிகத்திற்கே ஆபத்து ஏற்படும்” என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

ட்ரம்பின் மனநிலை

இதனால் அவரது மனநிலை குறித்து சந்தேகங்கள் எழுந்தன.

கேபிடல் ஹில் விசாரணையின் போது, ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் Sara Jacobs, “ஜனாதிபதியாக இருக்க ட்ரம்ப் மனநிலையாக தகுதியானவரா?” என்று நேரடியாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஹெக்செத், நேரடி “ஆம்” அல்லது “இல்லை” என்று கூறாமல், ட்ரம்பை பாதுகாக்கும் வகையில் பதிலளித்தார்.

மேலும், “இதே கேள்வி கடந்த நான்கு ஆண்டுகளில்  ஜோ கைடனுக்கு கேட்கப்பட்டதா?” என்றும் அவர் எதிர்வினை தெரிவித்தார்.

இதற்கு சாரா ஜேகப்ஸ், “ஜோ பைடன் தற்போது ஜனாதிபதி இல்லை. ட்ரம்ப் ஒன்றரை ஆண்டுகளாக ஜனாதிபதியாக உள்ளார்” என்று பதிலளித்தார்.

ஹெக்செத் மேலும் கூறுகையில்,

“நீங்கள் கூறும் அளவுக்கு நான் ஜனாதிபதியை விமர்சிக்க மாட்டேன். அவர் எங்கள் படையினரை முன்னிலைப்படுத்தும் சிறந்த தலைமைத் தளபதி என குறிப்பிட்டார்.

ஈரான் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைகள்

விசாரணையின் முக்கிய அம்சங்கள்

இந்த விசாரணையில், 2027 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க இராணுவ செலவுத்திட்டம் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்த திட்டம் $1.5 டிரில்லியன் வரை உயர்த்தப்படும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.

ஈரான் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைகள் முடங்கிய நிலையில், ட்ரம்ப் சமூக ஊடகங்களில் வெளியிட்ட சில பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

ஒரு பதிவில்,
“ஈரான் என் கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால், இன்று இரவே ஒரு முழு நாகரிகம் அழியும்” என்று அவர் எச்சரித்தார்.

மேலும், தன்னை இயேசு கிறிஸ்து போல காட்டும் AI படம் ஒன்றையும் அவர் பகிர்ந்தார்.

பின்னர் விமர்சனங்கள் அதிகரித்ததால் அதை நீக்கினார்.

ஆனால், “நான் மருத்துவராக மக்களை குணப்படுத்துவது போல காட்டப்பட்டுள்ளது” என்று அவர் விளக்கம் அளித்தார்.

Source: https://tamilwin.com/article/pete-hegseth-asked-if-trump-is-mentally-stable-1777644289

NO COMMENTS

Exit mobile version