Home முக்கியச் செய்திகள் தேசபந்து தென்னகோன் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

தேசபந்து தென்னகோன் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

0

தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) காவல்துறைமா அதிபராக கடமையாற்றுவதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவானது நேற்று (18.9.2024) உயர் நீதிமன்ற அமர்வின் தலைவர் யசந்த கோதாகொடவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடையீட்டு மனு

இந்த இடையீட்டு மனுவின் வழக்குக்கான ஆதாரம் இல்லாததால் நிராகரிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.

வணக்கத்திற்குரிய பெல்லன்வில தம்மரதன தேரர், பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் மற்றும் கொட்டபிட்டிய ராகுல தேரர் ஆகியோர் இந்த மனுவினை முன்வைத்தனர்.

NO COMMENTS

Exit mobile version