Home இலங்கை அரசியல் மிருசுவில் படுகொலை வழக்கு: கோட்டாபயவின் தீர்மானம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மிருசுவில் படுகொலை வழக்கு: கோட்டாபயவின் தீர்மானம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

மிருசுவில் படுகொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு டிசம்பரில் யாழ்ப்பாணம் மிருசுவிலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக மாற்றுமாறு இந்த மனுக்கள் கோரப்பட்டுள்ளன.

மிருசுவில் படுகொலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் அம்பிகா சத்குணநாதன் ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஆட்சேபனைகளைத் தாக்கல்

எனினும், மனுக்களின் பிரதிவாதிகள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

ஜூன் 25, 2015 அன்று, மிருசுவிலில் 8 பொதுமக்களைக் கொன்ற வழக்கில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு சுனில் ரத்நாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதன்போது கொல்லப்பட்டவர்கள் யாழ்ப்பாண நகருக்கு கிழக்கே 16 மைல் தொலைவில் உள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளனர்.

5 இராணுவ வீரர்கள்

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் 5 இராணுவ வீரர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

இதன்பின்னர், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​ஊழியர் சுனில் ரத்நாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில்  ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், எனைய 4 இராணுவ வீரர்களுக்கு கொலையில் தொடர்பு இருப்பதற்கான போதிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

NO COMMENTS

Exit mobile version