Home இலங்கை அரசியல் தனது நற்பெயருக்கு இழுக்கு: மில்லியன்களில் இழப்பீடு கோரும் பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர்

தனது நற்பெயருக்கு இழுக்கு: மில்லியன்களில் இழப்பீடு கோரும் பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலிதவிடம் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே.ராஜகருணா 500 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளார்.

ஆனந்த பாலித வெளியிட்ட அறிக்கை காரணமாக, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இழப்பீட்டை செலுத்துமாறு கோரி அறிவித்தல் அனுப்பியுள்ளார்.

தன் பெயரை பயன்படுத்தி திட்டமிட்டு பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் பிரசாரங்களை பாலித மேற்கொண்டதாக டி.ஜே.ராஜகருணா சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிவித்தல் கடிதம்

சட்டத்தரணி சம்பத் யாலேவத்தவினால் இது தொடர்பான அறிவித்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version