குருநாகலில் வெற்றிலையை மென்று துப்பிய நபர்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, கடந்த வாரம் (26) குருநாகல் பேருந்து நிலையத்தில் 07 பேரை அவர்கள் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்
கைது செய்யப்பட்ட நபர்கள் வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2025 அன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்.
பொது இடத்தில் மக்களை அசௌகரியப்படுத்தும் வகையில் வெற்றிலையை மென்று துப்புதல் மற்றும் புகை பிடித்தல் என்பது குற்றமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
