Home இலங்கை குற்றம் அநுரவை சம்மாந்துறை பகுதியில் பதற்றமடைய வைத்த புறா மீட்பு: இருவர் மீது விசாரணை

அநுரவை சம்மாந்துறை பகுதியில் பதற்றமடைய வைத்த புறா மீட்பு: இருவர் மீது விசாரணை

0

ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவினை புறா ஒன்றின்
மூலம் பதற்றமடைய காரணமான இருவர் சம்மாந்துறை
பொலிஸாரினால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை(13) தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்டத்திற்கான சம்மாந்துறை தொகுதியில் தேர்தல்
பிரசார கூட்டம் நடைபெற்றிருந்தது.

இதன்போது, அதிகளவான மக்கள் மத்தியில்
ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க உரையாற்றி வேளை, மேடையை அண்மித்த வானத்தில்
இருந்து சிவப்பு நிற மின்னொளி பாய்ச்சப்பட்டு ஏதோவொரு மர்மபொருள் நகர்ந்து
வந்துள்ளது.

பொலிஸ் விசாரணை

இந்நிலையில், இந்த கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த தேசிய மக்கள்
சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க உடனடியாக
தனது பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய மேடையில் இருந்து
சிறிது நேரம் அகற்றப்பட்டார்.

இதனை தொடர்ந்து, கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று முடிவடைந்த பின்னர் சம்பவம் தொடர்பில்
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் வழிகாட்டுதலில்
பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான
பொலிஸ் குழுவினர் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, கூட்டம் நடைபெற்ற பகுதியில் இருந்து LED LIGHT பொருத்திய ‘புறா’ ஒன்றே பறக்கவிடப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

@akalankaukwattaj ජාතීන් අතර සමඟිය ඇති කෙරූ මානව හිතවාදී නායකයා – අනුර කුමාර දිසානායක 🔥🙌 #akd #nppsrilanka #akalankaukwatta #anurakumaradissanayaka #2024 #viraltiktok #viral_video ♬ original sound – Akalanka Ukwatta

அத்துடன், அப்பகுதியில் புறா வளர்ப்பில் ஈடுபட்ட 18
மற்றும் 19 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்களை நேற்று (16) கைது
செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் சமூக ஊடகங்களில் காணொளியை
பதிவு செய்வதற்காக இரவு வேளையில் புறாவின் காலில் (LED LIGHT ) எனப்படும்
ஒரு வகையான மின் குமிழினை பொருத்தி அதனை தினமும் பறக்க விடுவதாக தமது
வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கைதான இருவரையும் சம்மாந்துறை
பொலிஸார் எச்சரிக்கை செய்து விடுதலை செய்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version