Home இலங்கை சமூகம் சிறையில் சுதந்திரமாக நடத்தப்படும் பிள்ளையான்! மட்டக்களப்பில் பகிரப்படும் கடிதங்கள்

சிறையில் சுதந்திரமாக நடத்தப்படும் பிள்ளையான்! மட்டக்களப்பில் பகிரப்படும் கடிதங்கள்

0

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிள்ளையானுக்கு சுதந்திரமாக செயற்படும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

தனது சகாக்களை காட்டிக் கொடுத்தமையால் அவருக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஆதாரமாக சில விடயங்களை சுட்டிக்காட்டலாம்.

உதாரணமாக, மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கடிதம் தொடர்பில் குற்றபுலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

அதேபோல, மட்டக்களப்பு முனைக்காடு ராமகிருஷ்ணா விளையாட்டு கழகத்தின் நிகழ்வொன்றில் ஒரு கடிதம் பகிரப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் பிள்ளையானின் வாழ்த்துச் செய்தி காணப்பட்டுள்ளது.

ஆகவே, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர் எப்படி இந்த கடிதங்களை அனுப்பலாம் என்ற கேள்வி எழுகின்றது.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி,

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா

NO COMMENTS

Exit mobile version