Home இலங்கை சமூகம் மன்னார் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்! ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி

மன்னார் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்! ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி

0

மன்னார் மக்கள் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலான கனிய மணல் அகழ்வு நிறுத்தப்படும் என  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதி வழங்கியுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் மறை மாவட்ட ஆயருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இடையில் நேற்றைய தினம்  (18)
மாலை இடம்பெற்ற விசேட சந்திப்பு குறித்து மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் தமிழ் நேசன் அடிகளார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தப் பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்.

கனிய மணல் அகழ்வு 

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள கனிய மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினை,
மின்சக்தியை பெறுவதற்காக மன்னாரில் காற்றாலை அமைக்கும் செயற்பாடுகளால்
எழுந்துள்ள பாரிய பாதிப்புக்கள், வடக்கு மாகாண அரசாங்கத்தின் கீழ் உள்ள
மன்னார் பொது வைத்திய சாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டியதன்
அவசியம் போன்ற விடயங்கள் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன.

கனிய மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினைகளையும் அதனால் மக்கள் எதிர்கொள்ளும்
பல்வேறு பாதிப்புக்களையும் ஆயர் ஜனாதிபதிக்கு எடுத்து விளக்கியபோது
அந்தச் செயற்பாடு முற்றாக நிறுத்தப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார்.

மின் சக்தியை பெறுவதற்காக மன்னாரில் காற்றாலை அமைக்கும் செயற்பாடுகளால்
எழுந்துள்ள பாரிய பாதிப்புகள், இத்திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாக
முன்னெடுத்துவரும் போராட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு
வரப்பட்டது.

ஜனாதிபதி உறுதி

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன், குறிப்பாக மக்களுடன்
பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என
ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண அரசாங்கத்தின் கீழ் உள்ள மன்னார் பொது வைத்தியசாலையை மத்திய
அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை ஆயர்  வலியுறுத்திய
போது இது தொடர்பாக உரிய அமைச்சர்களுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி
உறுதி அளித்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா

NO COMMENTS

Exit mobile version