Home இலங்கை அரசியல் பிள்ளையானிடம் பேசுவதற்கு காத்திருந்த ரணில்! உடனடியாக மறுக்கப்பட்ட அனுமதி

பிள்ளையானிடம் பேசுவதற்கு காத்திருந்த ரணில்! உடனடியாக மறுக்கப்பட்ட அனுமதி

0

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது  செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன்(பிள்ளையான்)  கலந்துரையாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(Aananda Wijepala) தெரிவித்துள்ளார். 

பிள்ளையானிடம் கலந்துரையாடுவதற்கு  சந்தர்ப்பம் ஒன்றை தருமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார். 

கோரிக்கை நிராகரிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் தனது பாதுகாப்பு அதிகாரி ஊடாக, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் இந்த வாய்ப்பை கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.  

எனினும், முன்னாள் ஜனாதிபதி ரணிலின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு சந்தேகநபருடன் தொலைபேசியில் பேசுவது சட்டவிரோதமானது என்பதால் அந்த கோரிக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அமைச்சர்  சுட்டிக்காட்டினார். 

NO COMMENTS

Exit mobile version