Home இலங்கை அரசியல் பிள்ளையானால் கடத்தப்பட்ட மற்றுமொரு நபர்.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்..

பிள்ளையானால் கடத்தப்பட்ட மற்றுமொரு நபர்.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்..

0

கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்னும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்பில் நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. 

அந்தவகையில், யுத்த காலத்தின் இறுதிப்பகுதியான 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பிள்ளையான் மற்றும் அவரின் குழுவினரால் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் தொடர்பில் சில தகவல்கள் கசிந்துள்ளன.

அதற்கமைய, 2009ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் கொழும்பில் உள்ள வர்த்தகர்களை கடத்தி, பிள்ளையான் பணம் பறித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. 

எனவே, தனது சித்தப்பா மற்றும் அவரின் மகனையும் பிள்ளையான் குழுவினர் கடத்தி, 5 கோடி ரூபா பணம் பெற்றதாக எமது தலைமுறை கட்சியின் ஸ்தாபகர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்தார். 

லங்காசிறியின் நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், பிள்ளையான் போன்ற குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

பிள்ளையான் தொடர்பான மேலும் பல தகவல்களுடன் வருகின்றது கீழ்வரும் காணொளி,  

NO COMMENTS

Exit mobile version