Home முக்கியச் செய்திகள் பிள்ளையானுக்கு மிக நெருக்கமானவர் சிஐடியினரால் அதிரடி கைது!!

பிள்ளையானுக்கு மிக நெருக்கமானவர் சிஐடியினரால் அதிரடி கைது!!

0

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சாரதியாகச் செயல்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (18) இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது நடவடிக்கை

அண்மையில் கொழும்பில் இருந்து சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.

2006 ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவம் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதன்போது அறிவிக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில், பிள்ளையானை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அவரின் சாரதியாக செயல்பட்ட நபரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version