Home இலங்கை அரசியல் தேடப்படும் பிள்ளையானின் அலுவலக சகாக்கள் : சிக்கப்போகும் முக்கிய புள்ளி

தேடப்படும் பிள்ளையானின் அலுவலக சகாக்கள் : சிக்கப்போகும் முக்கிய புள்ளி

0

கடந்த சில நாட்களாக ஒரு பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது பிள்ளையானின் (Pillayan) அலுவலக சோதனை விவகாரம்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு (Batticaloa) விரைந்த புலனாய்வு உயர் முகங்கள் மற்றும் விசேட அதிரடிப்படையின் ஆதரவுடன் பிள்ளையானின் வாவிக்கரை அலுவலகத்தை கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்னர்.

இதன்போது இதன்போது 09 mm துப்பாக்கிகளுக்கான 06 துப்பாக்கி ரவைகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், மூன்று கைபேசிகள், ஓட்டுநர் உரிமம் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தென்னிலங்கை ஊடககங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தது.

மேலும், அந்த அலுவலகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதான ஒரு செய்தி மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பரவியிருந்தது.

ஏன் இந்த திடீர் சோதனை, அங்கு கிடைக்கப்பெற்ற சான்றுப்பொருட்கள் எவை ? ஏன் அரச தரப்பு அவை. தொடர்பில் பகிரங்கப்படுத்தவில்லை?

அரச தரப்பு சாட்சியமாக பிள்ளையானுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய காத்தான்குடியைச்சேர்ந்த குசைன் ஐபிசி தமிழிக்கு எப்படியான தரவுகளை வழங்கினார்,

பிள்ளையான் விவகாரத்தை முடித்துவிட வேண்டும் எனபதில் குறியாக இருக்கும் அரச தரப்பும் இந்த நடவடிக்கைகளால் மகிழ்ச்சியடைந்த கிழக்கு மக்கள் தொடர்பிலும் இதன் பிண்ணனிகள் பற்றியும் ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு.

https://www.youtube.com/embed/hALXmwyuGM0

NO COMMENTS

Exit mobile version