Home இலங்கை அரசியல் தீவுச்சேனை வதைமுகாம் விசாரணையில் சிக்கப்போகும் கருணாவின் விசுவாசிகள்

தீவுச்சேனை வதைமுகாம் விசாரணையில் சிக்கப்போகும் கருணாவின் விசுவாசிகள்

0

2009ஆம் ஆண்டுக்கு முன்னரும் அதற்கு பின்னரும் கடற்படையினரை வைத்து தான் அன்றைய ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) பல செயல்களை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவன்காட் விவகாரம், ரவிராஜ் படுகொலை, எகெலியகொடவினுடைய கடத்தல் போன்றவை கடற்படையினர் தொடர்புபட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் கடற்படையினுடைய அடாவடி அதிகமாக இருந்தது.

திருகோணமலையில் மட்டும் வதை முகாம் இருக்கவில்லை தற்போது வெலிகந்தையிலும் வதை முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது வெலிகந்தைப் பகுதியில் கருணா – பிள்ளையானோடு இணைந்து இயங்கிய மங்களன் மாஸ்டர் என்பவர் இருந்த பகுதியை குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பகுதி சார்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணையானது காவல்துறை அதிகாரி ஒருவருடைய கொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

14.02.2009 இல் திருப்பெருந்துறையில் இருந்து சென்ற காந்தன் என்பவர் ஊறணி சந்தியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட நிலையில் பிள்ளையான் குழுவால் கடத்தப்பட்டார் என குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இவர் எவ்வாறு கடத்தப்பட்டார், இதற்கு பின்னாலிருந்து செயற்பட்டவர்கள் பற்றிய  இது தொடர்பான மேலதிக விடயங்களை ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காண்க…..



https://www.youtube.com/embed/iOl3Mhx7aAY

NO COMMENTS

Exit mobile version