Home இலங்கை அரசியல் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை கண்காணிக்க சென்ற கோட்டை நீதவான்

தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை கண்காணிக்க சென்ற கோட்டை நீதவான்

0

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட 9 சந்தேக நபர்களைக் கண்காணிக்க கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே சென்றுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த 9 பேர் குறித்து கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கணேமுல்லே சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகக் கூறப்படும் வழக்கறிஞரையும், பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் சந்தேக நபர்கள் குழுவையும் நீதவான் இதன்போது கண்காணித்துள்ளார்.

குற்ற புலனாய்வு திணைக்களம்

குற்ற புலனாய்வு திணைக்களம் சந்தேக நபர்கள் தொடர்பாக மேலும் அறிக்கை சமர்ப்பிக்கவும் தேவையான உத்தரவுகளை வழங்கவும் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, கோட்டை நீதவான் இந்த விஜயத்தை மேற்கொண்டு ஆராய்ந்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version