Home இலங்கை அரசியல் சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட பிள்ளையான் : பகிரங்கமாக ஒப்புக்கொண்டது மொட்டு கட்சி

சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட பிள்ளையான் : பகிரங்கமாக ஒப்புக்கொண்டது மொட்டு கட்சி

0

பிள்ளையான் (pillayan) புலிகள் அமைப்பில் இருந்து விலகி, எமது இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டமை போரை முடிப்பதற்கு ஓரளவு பங்களிப்பாக அமைந்தது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன(slpp) அறிவித்துள்ளது.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று(18) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர(sarath weerasekara) மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தெடார்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய நாயகன் என ஏற்க முடியாது

“உதய கம்மன்பில கூறுவதை போன்று பிள்ளையானை தேசிய நாயகன், என எம்மால் ஏற்கமுடியாது.

ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe) ராஜபக்ச அணியில் இல்லை. எனவே, அவர் பிள்ளையானுடன் ஏன் கதைக்க முற்பட்டார் என அவரிடம்தான் கேட்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டத்தரணியாக முன்னிலையான உதய கம்மன்பில 

 அதேபோல பிள்ளையானுக்காக கம்மன்பில(udaya gammanpila) சட்டத்தரணியாக முன்னிலையாகியுள்ளமை தொடர்பில் நாம் எவ்வித தவறையும் காணவில்லை.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

https://www.youtube.com/embed/0i19Dr5xmnE

NO COMMENTS

Exit mobile version