Home இலங்கை சமூகம் நாட்டு மக்களைக் காக்கும் பணியில் தனதுயிரை இழந்த விமானிக்கு ஜனாதிபதியின் இறுதி அஞ்சலி

நாட்டு மக்களைக் காக்கும் பணியில் தனதுயிரை இழந்த விமானிக்கு ஜனாதிபதியின் இறுதி அஞ்சலி

0

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்திற்குள்ளானதில், உயிரிழந்த விமானியின் உடலுக்கு  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். 

வென்னப்புவ – லுனுவில பகுதியில் ஏற்பட்ட இந்த உலங்கு வானூர்தி விபத்தில் க்ரூப் கப்டன் நிர்மல் சியம்பலாப்பிட்டிய தனது உயிரை இழந்தார். 

இறுதி அஞ்சலி 

இந்த நிலையில்,  அஞ்சலிக்காக  உடல் வைக்கப்பட்டுள்ள  ரத்மலானையில் அமைந்திருக்கும் அவருடைய வீட்டிற்கு இன்று காலை ஜனாதிபதி நேரடியாக சென்று தனது இறுதி அஞ்சலியினை செலுத்தியுள்ளார். 

மேலும்,  உயிரிழந்த விமானியின் மனைவி, பெற்றோர் உறவினர்கள் உள்ளிட்டோருக்கு தனது இரங்கலை ஜனாதிபதி இதன்போது தெரிவித்துக்கொண்டுள்ளார். 

இதன்போது, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 

  

NO COMMENTS

Exit mobile version